உலகையோர் நிலை என்றெண்ணாதே - க்ஷணம்
151. இராகம் (காலமே தேவனைத் தேடு) (124)
மோகனம் ரூபக
தாளம்
பல்லவி
உலகையோர் நிலை என்றெண்ணாதே - க்ஷணம்
ஒழிந்துபோம்
உன்னோடோரடியும் வராதே
அனுபல்லவி
பலமாக
பொக்கிஷம் பரத்திலே நாடு
பத்திரமாயங்கு
இருக்குதே வீடு
1. நிலையாது
செல்வம் எந்நாளும் - அவை
நீர்
குமிழிகள் போல நிமிஷத்தில் நையும்
உலையின்
மெழுகுபோல் உருகுமே மெய்யும்
உந்தனின்
ஜீவனைப் பிரிக்குமே வீயும்
2. தீரம்,
புகழ், கீர்த்தி நாசம் - மற்றும்
சேயர்
மனைவி சிநேகிதர் வேஷம்
தாரணி
முற்றுமே தவிர்த்திடு மோசம்
சார்ந்திடில்
ஆன்மாவுக்கென்றுமே தோஷம்
3. வானத்தின்
கீழ் யாவும் பண்டு - சால்மோன்
மாயை
என்றுரைத்ததை மறவாதே கண்டு
தானத்தோ
டேசுவைத் தப்பாமல் அண்டு
சாலோக
நித்திய பேரின்பமுண்டு.
Comments
Post a Comment