31 May 2018

ஏசுவண்டை சேருவேன் ஒளியில் ஒளியில்


162.  இராகம் இங்கிலீஷ்        (235)

பல்லவி

1.       ஏசுவண்டை சேருவேன் ஒளியில் ஒளியில்
          ஏசுவோடே நடப்பேன் திவ்ய ஒளியில்

அனுபல்லவி

            நாம் தேவனோடே நடப்போம் ஒளியில் ஒளியில்
            நாம் தேவனோடே நடப்போம் திவ்ய ஒளியில்

2.         சாபம் நீங்கிச் சுகிப்பேன் ஒளியில் ஒளியில்
            பாவம் முற்றும் வெறுப்பேன் திவ்ய ஒளியில்

3.         மீட்பர் பேரில் சாருவேன் ஒளியில் ஒளியில்
            சாட்சி சொல்லி ஜீவிப்பேன் திவ்ய ஒளியில்

4.         தூய நாதர்க்காகவே ஒளியில் ஒளியில்
            தீயோன் என்னைத் தொடானே திவ்ய ஒளியில்

5.         சாவை வென்று வாழுவேன் ஒளியில் ஒளியில்
            ஜீவ கிரீடம் சூடுவேன் திவ்ய ஒளியில்

6.         மோட்சம் வீட்டில் வசிப்பேன் ஒளியில் ஒளியில்
            மீட்பர் அன்பைப் போற்றுவேன் திவ்ய ஒளியில்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...