31 May 2018

ஆயத்த ஜெபம் செய்ய பெலன் தாரும் சுவாமி


154.  இராகம் (இம்மணர்க்குன்னருள்)         (179)

1.       ஆயத்த ஜெபம் செய்ய பெலன் தாரும் சுவாமி
          அடைக்கலமாயுந்தன் துணை வேணும் நேமி

2.         காயத்தால் குணக்கேடு தடைகள் வராமல்
            காப்பாற்றக் கேட்கிறேன் கிறிஸ்துவே தேவா

3.         சுருக்க நாளானதால் கொதிக்கிறான் சீறி
            சுடரொளிப் பட்டயத்தூதரால் காரும்

4.         ஏழு முறை ஜெபத்துக்கு தடைகள் வராமல்
            இரக்கமாய் தயவுடன் நடத்துமேன் சிவாமி

5.         கருத்தான மனதுடன் ஒருமித்துப்பாடி
            களிப்புடன் மன்றாட அருள் செய்யும் தேவா

6.         வருகையின் நாள் மிக நெருங்குதே சுவாமி
            மருரூப ஆவிக்காய் தவிக்கிறேன் பாவி

7.         கிருபையின் கரத்தினால் தாங்குமேன் சுவாமி
            மருரூப ஆவியை அளியுமேன் சுவாமி

8.         இம்மானுவேலர்க்கு எதிர் கொண்டு போக
            எண்ணையும் தீபமும் தாருமேன் சுவாமி

9.         கேட்கிற வரமெல்லாம் கிருபையாய் தாரும்
            கேடான மனமொன்றாய் பொருந்திட வாரும்

10.       மறுபடி பிறந்த தற்பெருமையைக் களைந்து
            மனத்தாழ்மை அணிந்திட படிப்பியும் சுவாமி

11.       இப்படியாகவே கேட்கும் மன்றாட்டை
            ஏசுவின் மூலமாய் ஏற்றுக்கொள் ஐயா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...