இதோ கிறிஸ்து மகாராஜன் வருகிறார்


97. இராகம் (ஓ! தாகமிகுந்தவரே அமர்ந்த)(81)

பல்லவி

                   இதோ கிறிஸ்து மகாராஜன் வருகிறார்
                        எச்சரிப்பாய் நடங்கள் - மகா

1.         கர்த்தரின் நாளைப் பரிசுத்தம் பண்ணாத கண்மூடி ஜாதிகளே
            கணக்கொப்புவிக்கும்போது தப்புவித்துக்கொள்வதை தேடிக்கொள்வீர்களோ

2.         அருமைத் தகப்பனார் நமக்கென்று ஆறுநாள் அன்பாகத் தந்திருக்க - பின்னும்
            அவருடைய நாளை அபகரித்துக்கொள்ள ஆசைப்படலாமோ

3.         இந்த நாள் எந்த நாள் என்று உணராத இருமனமுள்ளவரே - நமது
            ஏசு வரும்பொது எதிர் நிற்கக்கூடுமோ என் செய்தவீர் மானிடரே

4.         வேதத்தை மேல்போட்டு மிரட்டித் திரிகின்ற பேதைகளானவர்கள் - நமது
            மேசியா வருகையில் வெட்கமடைந்து வெருண்டோடிப்போவார்கள்

5.         அடைக்கலப்பட்டணம் கன்மலைக்கோட்டையும் கேடகமுமவரே - அந்த
            அடைக்கலக் கன்மலைக்கோட்டைக்குள்ளே வர ஆசை தானுமில்லையோ

6.         சத்தியம்பண்ணித் தவறி விழுகின்ற சண்டாள மானிடரே - அவர்
            தயவாயழைக்கையில் தாமதம் செய்யாமல் ஜல்தியாய் வாருங்களேன்

7.         அல்லை தொல்லை எல்லாம் அன்றைக்குப் பார்க்கிற அறிவில்லா மானிடரே
            அதாருடைய நாளென்றுணர்ந்து பாரங்கள் அகன்று போகாதேயுங்கள்

8.         நிலையான பட்டணமங்கே இருக்குது நிச்சய மென்றெண்ணுங்கள் - இந்த
            நிலையில்லாப் பூமியின் வாழ்வைச் சதமென்று எண்ணி அலையாதே

9.         நித்தம் நித்தம் நமதேசுவின் பாதத்தை பக்தியாய் பூஜியுங்கள் - நமது
            கஸ்திகள் துன்பங்கள் எல்லாம் நீக்கி நித்ய கரை சேர்ப்பவரவரே

10.       அத்தனின் சிலுவையை அண்டிக்கொண்டோமானால் அச்சமும் பயமுமில்லை - மனக்
            கெச்சிதமாகவே அச்சமில்லாமலே உச்சிதமாயிருப்போம் - இதோ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு