நேச தோழரே எங்கள் ஊராரே - பேயின்


142.  செஞ்சுருட்டி    ஆதி தாளம்  (122)

1.       நேச தோழரே எங்கள் ஊராரே - பேயின்
            ஆசாபாசம் விட்டுவர மாட்டீரோ

2.         சாத்தான் துள்ளுறான் மாற்றான் பொங்குறான் - அதி
            சீக்கிரத்தில் புறப்படுங்கள் தப்பிக்கொள்வீர்கள்

3.         கும்பிடவேண்டாம் கும்பிடவேண்டாம் - இந்த
            பேய்பசாசை ஒருநாளும் கும்பிடவேண்டாம்

4.         கொடை கொடு என்று கூத்தாடிதிரிந்தாலும் - ஒரு
            செம்புக் காசும் கூட நீங்கள் கொடுக்க வேண்டாம்

5.         கோமரத்தாடி வந்து கொக்கரித்தாலும் - இந்தக்
            குணங்கெட்ட பேய்களை நீங்கள் கும்பிடவேண்டாம்

6.         பேய்க்குச் செலவு செய்யும் பணத்தை - உங்கள்
            பெற்றோருக்கு சேலை துணி வாங்கிக்கொடுங்கள்

7.         பெற்றார் உற்றாரும் சீறி விழுந்தாலும் - இந்தப்
            பேய் பசாசை ஒரு நாளும் கும்பிடவேண்டாம்

8.         பாவஜீவியம் நரசு பாதையே - பாவம்
            போனால் இப்போ மீட்கப்படுவீரே

9.         சுத்த ஜீவியம் மோட்ச பாதையே - யுத்தம்
            செய்து கிரீடம் பெற வரமாட்டீரோ

10.       பாவி ஓடிவா என்று அழைக்கிறார் - உந்தன்
            பாவப்பாரம் தாங்க ஏசு காத்துநிற்கிறார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு