இன்றேசுயிர்த்ததால் எக்காள ஓசையால்


84. இராகம் 
(மேலோகராஜன் வருங்காலமாகுது)     (69)

1.       இன்றேசுயிர்த்ததால் எக்காள ஓசையால்
            விண்மண்ணின் ராஜனானவரைப் போற்றிப்பாடுவோம்

2.         கிறிஸ்துவுடன் நாம் மரித்ததுண்டானால்
            அவருடன் எழுந்திருப்போம் என்று நம்புவோம்

3.         சம்மனசோர் போற்றும் துங்கள் ஏசுவுக்கென்றும்
            இகமீதிலிருந்துமே புகழ் ஓங்குவதாக

4.         என் சேனாதிபதியாய் என் முன் செல்வதற்காய்
            உயிர்த்து முத்தரித் தோரில் முகற் பலனானார்

5.         இந்த நம்பிக்கை என் இருதயந்தனில்
            நடத்திச் சீர்படுத்தி நேராய் உம்மில் சேர்க்கவும்

6.         ஜெகநாதனின் வார்த்தை இகம் பொய்யாகும்படி
            யூதரடக்கி முத்தரித்தும் உயிர்த் தெழுந்தாரே

7.         பொன்முடியணிந்த இம்மானுவேலிவரே
            நின்போல் யானோர் கிரீடம் தரிக்க கிருபை அளியும்



Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே