30 May 2018

அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்

கைப்பிரதி:140

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

140.  இராகம் (அப்ப தேவப்பிதா)                                                              (120)

 

பல்லவி

 

                   அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்

                        எம்பரன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள்

 

1.         நல்லநாளிதிலே நாதனைப் பணியுங்கள்

            செல்வ பாக்யம் தரும் சீமானைத் தேடுங்கள்     

 

2.         சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்

            கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள்   

 

3.         வல்லதேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்

            தொல்லை அணுகாமலே சுத்தனருள் செய்குவார்

 

4.         கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்

            உத்தமரின் திவ்விய ரட்சிப்பைக் கூறுவோம்   

 

5.         பக்தியாய் ஜெபித்து பாடியே பூரிப்போம்

            நித்தனார் நம்மையே நீடூழி வாழ்விப்பார்

 

6.         ஆத்தும ஆதாயம் அன்புடனே செய்குவோம்

            பாத்திரராக்கியே பரனாசீர் புரிவார்                    - அன்பரே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...