அன்பின் ரூபம் நீ அரிய
43. இராகம், __ர்பார் ரூபக
தாளம் (254)
பல்லவி
அன்பின்
ரூபம் நீ அரிய
அன்பின்
ரூபம் நீ
அனுபல்லவி
இன்பலோக ராஜாவின் ஏசுமைந்த ஜேசே - அன்பின்
1. சுத்தர் சுத்தர் சுத்தர் என்னத்துதிக்கும்
சேனை ஜொலித்துமின்ன
நித்தியக்ருபைப்ரசன்ன நேயஜீவனே
பக்தியற்றோர் பவம் போக்கி பரிசுத்த பிரான்
கோபம் நீக்கி
மத்தியஸ்தம் செய்யநோக்கி மனுடனான மகிமைத்தேவா
2. வானம், புவி, வாக்கினாலே, மானிட உடல் கரத்தினாலே
ஞானமாய்ச் செய் தருளினாலே நடத்தும் சுவாமியே
நானிலத்தைப்புரக்க ஈண்டு தாம் அடியவர்
உருவம்பூண்டு
மான ஈன வறுமை சூழ்ந்து மாட்சிமை யெலாம்
மறந்த உன தன்பின்
3. மாறாத கருணைவாயா, வறியமக்களுக்கருள் சகாயா
சேராபீம் பணியுந்தூயா சிறுமைதீர் மெய்யா
மீறாத மறைவிலாசா வேதியர் புவியரசர் நீச
ரீறாக எவர்க்கும் நேசா, ஏசுவே தாசரேம்
எமதன்பின்
Comments
Post a Comment