விடுவேனோ நான் உம்மை விடுவேனோ
160. (188)
பல்லவி
விடுவேனோ
நான் உம்மை விடுவேனோ
1. ஆசீர்வதிப்பேனென்று ஆணையிட்டீரே துரையே
ஆசீர்வதித்த எந்தன் ஆசா நேசா பாசா உம்மை
- விடுவேனோ
2. பாவியான எந்தனுக்காய் பாடுபட்டீரே துரையே
பங்கில்லையோ உம்மிடத்தில் பட்சமாய் என்முகம்
பாராய் - விடுவேனோ
3. பங்குதர மாட்டேனென்றால் பட்டபாடு வீணாகுமே
பார்த்திபனே உம்மை ஒருக்காலும் விடமாட்டேனையா - விடுவேனோ
4. என் பாவம் பொறுக்காவிட்டால் ஏன் தானையா பாடுபட்டீர்
உந்தன் பாட்டாலென்ன பயன் உண்டு அதைச் சொல்லுமையா - விடுவேனோ
Comments
Post a Comment