நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்
138. இராகம் (இங்கிலீஷ்)
(118)
சரணங்கள்
1. நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்
இந்தப் பொய்யுலகை நம்ப வேண்டாம்
நேசம் காட்டித் துரோகம் செய்யும்
இந்தப் பாழுலகை நம்ப வேண்டாம்
2. உன்னைப் பெற்ற மாதா எங்கே?
போஷித்த உன் தந்தை எங்கே?
போய் விட்டாரோ போய் விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ
3. அண்ணனெங்கே தம்பி எங்கே?
அக்காளெங்கே தங்கை எங்கே?
ஆசையாகத் தேடி வைத்த
ஆஸ்தி செல்வம் தானுமெங்கே
4. திருடனைப்போல் சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயுமப்போ
பாம்பின் வாயில் தவளை போலப்
பரிதவிப்பாய் பரிதவிப்பாய்
5. பிரேதமாக பாவியுன்னை
தூக்கிப்போவார் கல்லறைக்கு
அங்கே உன்னை அடக்கஞ்
செய்வார் நம்புவாயோ உலகைப்பின்னும்
6. இயேசு நாதர் பாதம் தேடு
மீட்பை இன்றே பெற்றுக் கொள்வாய்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்.
Comments
Post a Comment