பரமசீயோன் நகரதிபதி வருகிற


107. இராகம் (எத்தனை திரள் என் பாவம்)          தன்யாசி (91)

பல்லவி

                   பரமசீயோன் நகரதிபதி வருகிற
                   பவனியைப் பார்க்க வாகும்

1.         ஆரவாரத்தினோடு தூதர்களெக்காள ஆர்ப்பரிப் போடு வாராரே
            வீரமாய் சிரமத்தில் ஏசுவின் மண்டலம் வெண் கொடிகள் பிடிக்கவே
            பார்க்கப் பயங்கரம் யார்க்கும் பயங்கரம்
            படபட மடமட திடுதிடு எனவரும்                     - பரமசீயோன்

2.         முன்பு ஒரு பவனி எருசலேமுக்கு வந்தார் முற்றிலுமா விசேஷம்
            பின்னும் ஒலிவலை மேகவெண் பரியேறிப் போனதுமா விசேஷம்
            அன்னமே இப்பவனி அதிலும் மகா முக்கியம்
            கன்னி சீயோன் மக்களைக் கலியாணம்கட்ட வாரார்      - பரமசீயோன்

3.         காதில் பொன்தோடு கையில் காரணப் பொற் சரிகை கண்ணில் கலிக்கம் போடு
            வாயினில் பூட்டுப்போடு பூட்டைத் திறந்து வேத மகததுவங்களைப் பாரு
            சூது வாதுகள் பேசி தோஷியாய்ப் போகாதே
            தூதுகள் வருகுது தூங்காதே தூங்காதே                       - பரமசீயோன்

4.         அரையில் சத்தியக் கச்சை மனதினில் மறைவிளக்கு அணையாமல் வைத்துக்கொள்வாய்
            குறையாமல் ஆவியின் எண்ணைதனை நீ கூடி எடுத்துக் கொள்வாய்
            நிறைவான ஞானாகாரம் மறைவான மன்னா கொண்டு
            நேசராம் ஏசு வாரார் ஆசையுடன் ஓடி வா                      - பரமசீயோன்

5.         புத்தியில்லாத கன்னியாஸ்திரி தன்னைப்போல புறம்பே நின்று விடாதே
            அத்தத்தின் வாழ்வை நம்பி நித்திய மோக்ஷானந்த ஆசையைப் போக்கிவிடாதே
            கர்த்தரின் சேனைகள் ஆயத்தப்படுகிறார்
            காலம் கடத்தினால் மோசம் பெரிய மோசம்                    - பரமசீயோன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு