நித்திய ஜீவன் எனக்குண்டு நியாத்தீர்ப்பின் நாளிலே


112. இராகம்  இங்கிலீஷ்            (93)

1.       நித்திய ஜீவன் எனக்குண்டு நியாத்தீர்ப்பின் நாளிலே
            என் பயமெல்லாம் நீங்கிற்று - விசுவாசித்தபோதே

பல்லவி

            துன்பமெல்லாம் சகிப்போம் இன்னும் கொஞ்சக்காலந்தான்
            மோட்சம் போவோம் சீக்கிரத்தில்
            பேயின் தந்திரங்களுக்கு பயப்படமாட்டோம்
            அவன் காலம் கொஞ்சம் தான்

2.         உலகம் என்னைப் பகைத்தால் பயமின்றிப் போர் செய்வேன்
            சோதனை எல்லாம் வெல்லுவேன் மீட்பரின் பலத்தால்

3.         நீ உன் பாவத்தை உணர்ந்து மீட்பரின் பலத்தால்
            அவர் உன் பாவம் போக்குவார் பரிசுத்தமாக்குவார்

4.         துன்ப துக்க மிகுத்தாலும் அவரை விட்டு நீங்கேன்
            என் மீட்பரை நான் சந்தித்து மோட்ச கரை ஏறுவேன்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே