31 May 2018

தாசரே, இத்தரணியை அன்பாய்


141.  சங்கராபரணம்    ஆதி தாளம்  (121)

பல்லவி

 

                              தாசரே, இத்தரணியை அன்பாய்

                                    இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.

அனுபல்லவி
                        நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
                        அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்
                        வெளிச்சம் வீசுவோம்   

சரணங்கள்

1.         வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை
            வருந்தி அன்பாய் அழைத்திடுவோம்
            உரித்தா யேசு பாவப் பாரத்தை, நமது துக்கத்தை
            நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே                          - தாசரே

2.         நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
            நீசரை நாம் உயர்த்திடுவோம்
            பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள்
            படுகுழிக்குள் விழுந்தனரே                                            - தாசரே

3.         பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
            பட்சமாக உதவி செய்வோம்
            உசித நன்மைகள் நிறைந்து, தமை மறந்து
            ஏசு கனிந்து திரிந்தனரே                                              - தாசரே

4.         இந்துதேச மாது சிரோமணிகளை
            விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்
            சுந்தரக்குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
            நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட                            - தாசரே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...