பவனி செல்கின்றார் ராஜா
49. யமுனா கலியாணி ரூபக
தாளம்
பல்லவி
பவனி
செல்கின்றார் ராஜா - நாம்
பாடிப்புகழ்வோம்
நேசா.
அனுபல்லவி
அவனிதனிலே மறிமேலேறி ஆனந்தம் பரமானந்தம்
- பவனி
1. எருசலேமின்
பதியே சுரர் கரிசனையுள்ள நிதியே
அருகில்
நின்ற அனைவர் போற்றும் அரசே எங்கள் சிரசே! -
பவனி
2. பன்னிரண்டு
சீஷர் சென்று, நின்று பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயஞ்சேர்
மனுவின் சேனை நாத கீதம் ஓத. -
பவனி
3. குருத்தோலைகள்
பிடிக்க, பாலர் கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த
தொனியாய் ஓசன்னாவென்று போற்ற மனந்தேற்ற. -
பவனி
4. பெரியோர்களும் தடுக்க, நல்ல வறியோர்களும் அடுக்க
தெரியாதோறும் ஆவியாலே தேட அருள் நீட - பவனி
5. வேதபாரகர் மயங்க தம் வேத சாஸ்திரம் இலங்க
பாதகமதைத் தொலைக்கும் யேசுபாலன் தேவசீலன் - பவனி
Comments
Post a Comment