31 May 2018

சுந்தரமேசையா உன் திரு நாமத்தை


168.  இராகம் (ஆனந்தமே சரமானந்தமே, இயேசு)                            (270)

                   சுந்தரமேசையா உன் திரு நாமத்தை
                        எந்த நாளும் போற்றிக்கொண்டாடுவேன்
                        நின் இன்ப சன்னதி முன் நின்றாடுவேன்

அனுபல்லவி

            அந்தி சந்தி மத்தியானங்கள் சாமங்கள்
            அல்லும் பகலும் கூடி மன்றாடுவேன்

1.         இவ்வுலகத்தினில் பங்கப்படாமல்
            இருந்து தவம்செய்து அஞ்சலிப்பேன்
            அந்தர மானுவேல் என் செல்வமே என
            தாசீர்வாதம் பெற பஞ்சரிப்பேன்

2.         ஆவி தேகம் இரண்டு தாவி உனைத்தேடி
            ஆறுதல் நாடுதே கரையனே
            பாவி என்று தள்ளிக்கோபிக்காதே எனில்
            பட்சம் வைத்தன்பாய் ரட்சியும் என்னை

3.         உன் திரு புண்ணியம் ஆனந்தக் காருண்யம்
            உறுதி விசுவாசம் எனக்கதுவே
            என் தவம் கவனம் ஜெபம் என்றென்றுமே
            உன் சமுகத்திற்குள் வந்ததுவே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...