நித்திய மோட்சானந்த மகிமையை நினைத்தாலு முடியாது - அதை


119. செஞ்சுருட்டி      சாப்பு தாளம் (100)

1.       நித்திய மோட்சானந்த மகிமையை நினைத்தாலு முடியாது - அதை
            மெத்தச் சுருக்கமதாய் வேதத்தோடொத்துப் பார்த்தால் தெரியும்

2.         பக்தர்காயாதி முதல் ஆயத்தம் பண்ணின மோட்சநகர் - மகிமை
            கர்த்தரின் வேதத்தினால் அறிந்திட கண்ணே எழுந்துவாவே

3.         கண்ணினால் கண்டிடாத மகிமை காதினால் கேட்டிராத - ராகம்
            மண்ணின் மனுப்புத்திரருக்கு எட்டிடாத மங்களமான நகர்

4.         மங்கள நகரத்துக்கு மதில் வச்சிரக்கல்லாலே போட்டிருக்கும் - மிகு
            தங்கத்தைப்போல் பளிங்காய் துலங்கிடும் சாயுச்சித பட்டணமே

5.         பன்னிருவாசல்களாம் அஸ்திபாரம் பன்னிருவிதக் கற்களாம் - அதின்மேல்
            பன்னிரு அப்போஸ்தலர் நாமங்களும் பதியப்பட்டிருந்ததுவாம்

6.         பன்னிரு முத்துக்களாம் அதின்முன் பன்னிரு தூதர்களாம் - காவல்
            பன்னிருகோத்திரத்தார் நாமமும் பதியப்பட்டிருந்ததுவாம்

7.         தேவனும் ஆட்டுக்குட்டியிருவரும் தேவாலயமதற்கு - அந்த
            தேவருலாவுகின்ற நகரமும் தெளிவுள்ள சுத்தப்பொன்னாம்

8.         சூரிய சந்திரனின் ஒளியங்கு தோன்றிடக்கூடாது - அவர்
            நீதியின் சூரியனாய் பிரகாசிப்பார் நிச்சயம் நிச்சயமே

9.         தெய்வத்தின் ஜோதிமயம் இலங்கிடும் தெய்வத்தின் புஸ்தகத்தில் - பெயர் பெற்ற
            தெய்வ பக்தர்களாய் பிரவேசிக்கும் தெய்வ நகரமிதே

10.       மெத்த பளிங்குக்கொப்பாய் தெளிவான சுத்தஜலங் கொடுக்கும் - ஜீவநதி
            கர்த்தரின் ஆசனத்திலிருந்துமே அத்தலம் எங்கும் பாயும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு