பார் பார் பார் தேவ ஜீவன் போகுதுபார்
80. செஞ்சுருட்டி சாப்பு தாளம் (65)
பல்லவி
பார்
பார் பார் தேவ ஜீவன் போகுதுபார்
சரணங்கள்
1. கண்விழி வீழ்ந்திட கைகளயர்ந்திட கால்கரம்
சாய்ந்துவிழ
விண்ணொளி மங்கி ஆவி பிரிந்து திருமேனி
குளிர்ந்திடுதே - பார்
2. கல்வாரி வெற்பிலே காரிருட்டிலே காணுது செவ்வானம்
நல்வாரி வீசுது செவ்வாரி பெய்யுது நாடு
செழித்திடவே - பார்
3. பஞ்சகாயங்களில் செஞ்சுனை பாயுதுபாவி நெஞ்சைக்கழுவ
சஞ்சீவி பஞ்சப்பிரளயம் சாவது தற்பரன் பக்கத்திலே
- பார்
4. பாவநாசத்திலே புண்ணிய கன்மலை பார்முனி ஓங்கிய
கோல்
கோபதாபத்திலே வீசினவீச்சிலே குமிழிவிட்டோடுது
பார் - பார்
5. ஐந்து மண்டபத்தாறு பெதஸ்தா ஆங்கு கல்வாரி
வெற்பில்
ஐந்து மடையுமே உடைந்து அருள் சாடுது பார் - பார்
6. ஜீவநதியிலே ஏழுதரமுங்குதீரும் உன் பாவக் குஷ்டம்
ஆவலுடன் சொன்னேன் சொல்லச் சொன்னார் ஐயா
அதோ பார் - பார்
7. பார்த்தால் கேட்ட மனுப்படிக்காகும் ஓ பாவி
சிலுவையைப்பார்
தீர்த்தார் பாவம் தீர்த்தபடி தகை தீர்த்திடலாம்
ஓடி வா - பார்
Comments
Post a Comment