28 May 2018

என்ன சுகம் என் ரட்சகர் சமுகப்பேரானந்தம்


121. அம்சத்தொனி       ஆதி தாளம்  (102)

பல்லவி

          என்ன சுகம் என் ரட்சகர் சமுகப்பேரானந்தம்
          பரமானந்த மோட்ச சுகானந்தம் அதைப்
            பெற்று அனுபவித்தால் என்னசுகம்

அனுபல்லவி

          பொன்னகர் வீதியில் எந்நேரம் பாடலாம்
            கின்னரம் தம்பூர் வீணை இன்னிசை கேட்கலாம்

1.         ஜீவநதியில் களித்துக்குளிக்கலாம்
            ஜீவகனியைப் புசித்துச் செழிக்கலாம்                - என்ன

2.         வெற்றி பொன் வெண்ணங்கி தரித்துக் கொள்ளலாம்
            சுத்த பொன்னால் சொகுசாயிருக்கலாம்             - என்ன

3.         தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்
            சிங்காசனத்தில் சொகுசாயிருக்கலாம்                  - என்ன

4.         கர்த்தனை எப்போதும் தரிசித்து வாழலாம்
            அத்தனின் சமுகம் சேவித்து ஆளலாம்             - என்ன

5.         வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை
            கேட்டின் மகனுமங்கே கூடியிருப்பதில்லை       - என்ன

6.         நேசரின் ரத்தத்தால் மீட்பை அடைந்தவர்கள்
            ஆசனமீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள்           - என்ன           

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...