31 March 2026

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா

                   என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ

                        உலக நேசங்கள் ஈடாகுமா

                        என் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ

 

1.         அன்பின் அக்கினி பற்றியெரியுதே

            உள்ளமெல்லாம் உம்மை நாடித் தேடுதே

            தண்ணீர்கள் தணிப்பதில்லையே

            நேசரே உந்தன் அன்பினை

 

2.         திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியது

            உந்தன் நாமமோ இனிமையானது

            ருசித்து விட்டேன் உந்தன் அன்பினை

            அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை

 

3.         தாயும் நீரே தந்தையும் நீரே

            சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே

            ஆத்ம நேசர் எந்தன் நேசரே

            ஆயுளெல்லாம் போதும் நீரே

 

4.         வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர்

            இன்பமானவர் நீர் மதுரமானவர்

            உன்னத பாடல் உமக்குத்தானய்யா

            அன்பரே எந்தன் இயேசய்யா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...