31 March 2026

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த

நிஜீ.கீதங்கள்:227

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியானவரே ஆவியானவரே

                        பரிசுத்த ஆவியானவரே

                        அன்பின் ஆவியே அன்பின் ஆவியே

                        அபிஷேகம் இன்று தாருமே

 

1.         பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே

            கன்மலை தடாகமாக வேண்டுமே

            கற்பாறை நீரூற்றாக வேண்டுமே

            வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

 

2.         ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமே

            ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே

            ஒழுங்கின்மை மாற வேண்டுமே

            வெறுமை நிறைவாக வேண்டுமே

 

3.         ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே

            பாழிடங்கள் அரண்மணையாகவே

            உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமே

            வாழ்விலே மாறுதல் வேண்டுமே

 

4.         நாவிலே அக்கினி வேண்டுமே

            உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே

            பெருங்காற்று முழக்கம் வேண்டுமே

            இருக்குமிடம் அசைய வேண்டுமே

 

 

- Pastor. Caleb Jeyakumar, Kattathurai.

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...