ஆராதனை உமக்குத்தான்
அப்பா அப்பா உமக்குத்தான் - 2
எஜமான் நீர் இருக்க
அடிமை நான் ஆராதிக்க - 2
இரத்தத்தால் கழுவி என்னை
சுத்தமாக மாற்றினீரே - ஆராதனை
1. சாரோனின் ரோஜாவே
பூத்து குலுங்கும் வாசனையே
உம்மைப் போல் மணம் வீச
யாருண்டு உலகினிலே - 2 - ஆராதனை
2. சீலோவாம் குளத்தினிலே
கழுவும் போது கண் திறந்தீர்
எப்பத்தா என்று சொல்லி
செவிகளை திறந்து விட்டீர் - 2 - ஆராதனை
3. அப்பாவின் பாதத்தில் நான்
அமர்ந்திருந்து பெலனடைந்து
கழுகு போல் சிறகடித்து
உயர உயர பறந்திடுவேன் - 2 - ஆராதனை
4. அக்கினி அபிஷேகம்
தலை மேல் இறங்கணுமே
தூபமாய் நறுமணமாய்
துதிகளை நான் செலுத்தணுமே - 2 - ஆராதனை
- T.G. Sekar
No comments:
Post a Comment