31 March 2026

ஆனந்தமே பரமானந்தமே இயேசு

ஞா.கீ:451

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

451. இராகம்: சங்கராபரணம்                            ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                   ஆனந்தமே பரமானந்தமே-யேசு

                        அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

 

                             சரணங்கள்

 

1.         இந்தப் புவி ஒரு சொந்தமல்லவென்று

            இயேசு என் நேசர் மொழிந்தனரே

            இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு

            இங்கேயே பங்காய் கிடைத்திடினும் - ஆன

 

2.         கூடாரவாசிகளாகும் நமக்கிங்கு

            வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?

            கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்

            செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ - ஆன

 

3.         யேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்

            ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே!

            என்நேசர் தன்முக ஜோதியே யல்லாமல்

            இன்பந்தரும் பொருள் ஏதுமில்லை - ஆன

 

 

- அருட்திரு. வி.டி. சகாயம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...