ஆராதனை
இந்த வேளை
ஆண்டவரைத் தொழும் காலை -
2
துதியுடனே ஸ்தோத்தரிப்போம்
தூயவரைத் தொழுதிடுவோம் -
2
1. ஆவியுடன் நல் உண்மையுடன்
ஆராதிப்போம் அவர் நாமத்தையே - 2
கூடிடுவோம் பணிந்திடுவோம்
கல்வாரி அன்பினை பாடிடுவோம் - 2 - ஆராதனை
2. திரு ரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த
திருச்சபையில் தினம் கூடிடுவோம் - 2
தவறாமல் வேதம் ருசி பார்த்திட
திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம்
- 2 - ஆராதனை
3. மெய் சமாதானம் கிருபையோடு
மாறாத மீட்பர் மகிமையோடு - 2
மாசற்ற பேரின்ப அன்பினிலே
மறுரூபமடைந்து பறந்திடுவோம் - 2 - ஆராதனை
No comments:
Post a Comment