31 March 2026

ஆனந்தமாய் நம் தேவனை

நிஜீ.கீதங்கள்:1370

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆனந்தமாய் நம் தேவனை

                   கீதங்கள் பாடி துதித்திடுவோம்

                        தொழுவோம் பணிந்திடுவோம்

                        அவர் தான் பாத்திரரே

 

1.         மகிமையும் வல்லமை கனத்திற்கு பாத்திரர்

            சகலமும் சிருஷ்டி தேவன் அதிபதி இயேசுவே

            பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்

            பாத்திரர் இயேசு பாத்திரரே

 

2.         ஒளிதரும் கண்களோ சுடர்தரும் பாதங்கள்

            பெருவெள்ள இரைச்சல் சத்தம்

            வலக்கரம் வல்லமை சிறந்தவர் அழகில் சிறந்தவர்

            துதிகளை செலுத்தி தொழுதிடுவோம்

 

3.         ஜீவன்கள் மூப்பர்கள் தூதர்கள் யாவரும்

            பணிந்திடும் தேவன் நீரே பரிசுத்தர் இயேசுவே

            ஆவியில் நிறைந்து தொழுகுவோம்

            ஆண்டவர் இவரை பணிந்திடுவோம்

 

4.         ஆதியும் அந்தமும் நீர் ஞானத்தில் சிறந்தவர்

            யூதாவின் சிங்கம் நீரே துதிகளின் பாத்திரர்

            துதிகளை சாற்றி பணிகுவோம்

            ஸ்தோத்திரம் செலுத்தி தொழுதிடுவோம்

 

5.         நன்மைகள் யாவையும் அளித்திடும் தேவனாம்

            உண்மையாய் நாமே என்றும் விழிப்புடன் ஜீவித்து

            மகிமையில் சேர்ந்து புகழ்ந்திட

            மகிபனை நாமே துதித்திடுவோம்

           

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...