31 March 2026

ஆவியை ஊற்றும் அக்கினி ஊற்றும்

நிஜீ.கீதங்கள்:2473

To Download Txt Lyrics file

 

                   ஆவியை ஊற்றும் அக்கினி ஊற்றும்

                        வல்லமை ஊற்றும் ஐயா

                        வரங்கள் தாரும் கிருபை தாரும்

                        அக்கினி ஊற்றும் ஐயா

 

1.         வல்லமையுள்ள அபிஷேகத்தால்

            எலியாவை நிறைத்தீர்

            வார்த்தையாலே மழையை நிறுத்தி

            வல்லமை காரியம் செய்திட்டீரே

            அக்கினி இறக்கினீரே

            அவபக்தியை அகற்றினீரே

 

2.         இரு மடங்கு அபிஷேகத்தால்

            எலிசாவை நிறைத்தீர்

            பன் மடங்கு ஆவியின் வரத்தை

            தேவ குமாரன் மேல் ஊற்றினீரே

            என்னை நிரப்பும் தேவா

            உந்தன் அபிஷேகத்தால்

 

3.         ஆனந்தமான அபிஷேகத்தால்

            தாவீவை நிறைத்தீர்

            ஆடிப் பாடி நடனமாடி

            ஆவியில் நிறைந்து போற்றினாரே

            ஆவியால் நிரப்பும் ஐயா ஆடிப் பாடிடவே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...