137. இராகம்: அமிர்தகல்யாணி ஆதிதாளம்
பல்லவி
ஆவியை மழைபோலே யூற்றும்,-பல
சாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய்
ஜீவனை விட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இரங்கிடச்
செய்யும். - ஆவியை
சரணங்கள்
1. அன்பினால் ஜீவனை விட்டீர், - ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். - ஆவியை
2. சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் பர்த்தாவாம்[1] யேசு
பாக்கிய ரென்னும் நல் வாக்கையருளும். -
ஆவியை
3. சாத்தானின் கோஷ்டம்[2] அதிகம்;
- அவன்
தந்திரக் குணங்களின் சேஷ்டை அதிகம்;
கர்த்தன் கிறிஸ்துவின் காயத்தினாலே
கலகக் குணங்களை ஒழிந்திடச் செய்யும் -
ஆவியை
4. காத்திருந்த பல பேரும் - மனங்
கடினங் கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும். - ஆவியை
5. தோத்திரக் கீதங்கள் பாடி - எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாறி யூற்றும்.
- ஆவியை
- அருளானந்தம் பிரசங்கியார்
No comments:
Post a Comment