31 March 2026

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்

நிஜீ.கீதங்கள்:1408

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆறுதலின் தெய்வமே உம்முடைய

                        திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது

 

1.         உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்

            உண்மையிலே பாக்கியவான்கள்

            தூய மனதுடன் துதிப்பார்கள்

            துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்

 

2.         உம்மிலே பெலன் கொள்ளும்

            மனிதர்களெல்லாம்

            உண்மையிலே பாக்கியவான்கள்

            ஓடினாலும் களைப்படையார்

            நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்

 

3.         கண்ணீரின் பாதையில்

            நடக்கும் போதெல்லாம்

            களிப்பான் நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்

            வல்லமைமேலே வல்லமைகொண்டு

            சீயோனைக் காண்பார்கள் - ஆமென்

 

4.         வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட

            உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது

            ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்

            வாசலில் காத்திருப்பேன் - ஆமென்

 

5.         ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி

            ஆர்வமுடன் கதறுகின்றன

            உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்

            கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...