31 March 2026

ஆனந்தமாக இச்சங்க நாளில்

ஞா.கீ:465

To Download Txt Lyrics file

 

465. இராகம்: ஹம்சத்வனி                               ஆதி தாளம்

 

கண்ணிகள்

 

1.       ஆனந்தமாக இச்சங்க நாளில்

          ஆண்டவர் பாதம் பணிவோமே,

            ஆன நன்மை தந்தா தரித்தோரை

            ஆவலாய்ப் போற்றித் துதிப்போமே

 

2.         காணிக்கையாக ஈகுவோம் செல்வம்

            கர்த்தரின் வேலை செய்வோமே;

            வேண்டும் உள்ளத்தைக் கொடுப்போமே

            வேதனின்[1] நாமம் வளர்ப்போமே.

 

3.         அன்பின் ஊற்று ஆற்றுந் தண்மை

            இன்பநற் பெருக்கு எழுந்தோட

            துன்பந் தொல்லைப் பாலைவனங் கடக்கத்,

            தூயவன் காக்க நினைப்போமே.

 

- ஓய். ஆமோஸ்



[1] இறைவன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...