31 March 2026

ஆவியின் கூட்டுறவில் அனைவரும்

புத்தெழுச்சி

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆவியின் கூட்டுறவில்

                        அனைவரும் வாழ்ந்திடுவோம்

            அனுதின வாழ்வில் தூய

                        உறவினில் மகிழ்ந்திடுவோம்

 

1.         தொடர்பு உறவிலே நிலைத்திருப்போம்

            தொழுகை புரிந்துமே பெலனடைவோம்

            இடர்கள் யாவையும் கலைத்திடுவோம்

            இயேசுவின் அன்பினில்

                        நிலைத்திருப்போம் - ஆவியின்

 

2.         தோழமை உறவிலே நிலைத்திருப்போம்

            தோழர்களாக நாம் இணைந்து நிற்போம்

            ஆழமான நல்ல அன்பு கொள்வோம்

            அனைவரும் சமமாய்

                        வாழ்ந்திடுவோம் - ஆவியின்

 

3.         தொண்டு உறவினிலே பணிபுரிவோம்

            தொய்ந்திட்ட பிறரையே தேற்றிடுவோம்

            அண்டத்தில் நீதிநிலைபெறவே

            அடியவராய் பணி புரிந்திடுவோம்

                        நாம் - ஆவியின்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...