27 March 2026

ஆரையா பெருமானே எனக்

கீ.கை:94

To Download Txt Lyrics file

 

94. இராகம்: யமுனா கலியாணி.                                                                                   தாளம்: ரூபகம்.

 

பரிசுத்த பர்த்தொலொமேயுவின் திருநாள் - ஆகஸ்று 24ஆம் நாள்

 

“ஆசையாகினேன் கோவே” - என்ற மெட்டு

 

பல்லவி

 

                   ஆரையா பெருமானே - எனக்

                   கறிவு தாரும் பூமானே.

 

அனுபல்லவி

 

                        தீரையா வினை வேறே யார்துணை

                        சின்மயா - தேவ - தன்மையா.              - ஆரையா

 

சரணங்கள்

 

1.         பர்த் தொலொ மேயு திருநாள் - வரப்

            பார்த் திருந் தேன் நான் வெகு நாள்

            நர்த்தன மொடு பாட - அந்த

            நாத்தானியேலும் ஆட                                      - ஆரையா

 

2.         கானா வூரில் பிறந்தோன் - யாரும்

            காணா மற் செபம் புரிந்தோன்

            ஏனோ மோசே தீர்க்க-தரிசி

            எழுத்தாம்? என்ன-கருத்தாம்?                         - ஆரையா

 

3.         நாச ரேத்தில் நன்மை - யுண்டோ

            நயந்து கொள்ளும் தன்மை

            பேச வந்தீர் பிலிப்பே - அவர்

            பேரும் - இயேசு - சிரிப்பே                   - ஆரையா

 

4.         வந்துமே பார்த்திடு தம்பி - அப்போ

            வசைசொல்லமாட்டாய் நம்பி

            எந்தை இயேசு கிறிஸ்து - எனக்க

            எசமான் - இரட்சா - பெருமான்            - ஆரையா

 

5.         முணக்க முடனே நாத்தான் - வந்து

            முணுமு ணென்றுமே பார்த்தான்

            வணக்க முடனே பணியு - முன்னே

            வரைந்தார் - வாக்குப் - பறைந்தார்     - ஆரையா

 

6.         உத்தம இசரவேலன் - உயர்

            அத்திம ரத்தின்கீழ் சீலன்

            கர்த்தன் கிறிஸ்து உரைக்கக் - காட்சி

            கண்டான் - மாட்சி - கொண்டான்       - ஆரையா

 

7.         ரபியே நீர்தேவ சுதனே - இசரேல்

            ராசாதி ராசனுந் தானே

            தவிதி றைவனீர் தவமே யுமகன்

            நானே - பாவி - நானே                         - ஆரையா

 

8.         இந்தியா மார்க்கம் வரவே - நாத்தான்

            எங்கணும் சாட்சி யுறவே

            அந்திய காலம் தோலை யுரித்து

            அறைந்தார் - குரு - சறைந்தார்         - ஆரையா

 

9.         சிலுவை யிலிருந் திறக்க - உயிர்

            திரும்ப வும்வந்து பிறக்க

            அலகை மனுடன் உலக வாளால்

            அறுத்தான் - சிர - சறுத்தான்              - ஆரையா

 

 

          - S. உவால்டர் கவிராயர், தென்மலை.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...