31 March 2026

ஆனந்த துதி ஒலி கேட்கும்-1

நிஜீ.கீதங்கள்:99

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆனந்த துதி ஒலி கேட்கும்

                        ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்

                        ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்

                        ஆண்டவர் வாக்கு பலிக்கும்

 

1.         மகிமைப் படுத்துவேனென்றாரே

            மகிபனின் பாசம் பெரிதே

            மங்காத புகழுடன் வாழ்வோம்

            மாட்சி பெற்றுயர்ந்திடுவோம்

            குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்

            கரையில்லா தேவனின் வாக்கு - ஆ ஆ

 

2.         ஆதி நிலை எகுவோமே

            ஆசீர் திரும்பப் பெறுவோம்

            பாழான மண்மேடுகள் யாவும்

            பாராளும் வேந்தன் மனையாகும்

            சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்

            சீயோனின் மகிமை திரும்பும்    - ஆ ஆ

 

3.         விடுதலை முழங்கிடுவோமே

            விக்கினம் யாவும் அகலும்

            இடுக்கங்கள் சூழ்ந்திடும் வேளை

            இரட்சகன் மீட்பருள்வாரே

            நகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுத்திடும்

            விடுதலை பெருவிழா காண்போம் - ஆ ஆ

 

4.         தாவீதின் மைந்தன் தலையாவார்

            தாசனின் தலைகள் வணங்கும்

            தேடிடும் தாசரின் கானம்

            தேவாதி தேவனின் தியானம்

            தலைவர்கள் எழுவார் எளியோரும் உயர்வார்

            பணியாளர் திரண்டெழும் ஆண்டு

 

5.         நிர்மூலம் செய்திடவும் மாட்டார்

            நீதியைக் கைவிடவு மாட்டார்

            மட்டான சிட்சைகளைக் காண்போம்

            மாறாத தேவன் வாக்கிதுவே

            திருத்திக் கொள்வோமே திருந்திடுவோமே

            அடங்கியே அவர் கரம் அமைவோம் ஆ...

 

6.         ஆறாத காயங்கள் ஆறும்

            ஆரோக்கியம் வாழ்வினிலே மூடும்

            ஆற்றியே தேற்றும் நல் நாதர்

            போற்றியே பாதம் தரிப்போம்

            அனாதி தேவனே அடைக்கலம் பாரினில்

            அனாதையாவதே இல்லை

 

7.         யாக்கோபு நடுங்கிடுவானோ

            யாக்கோபின் தேவன் துணையே

            அமரிக்கை வாழ்வை அழைப்போம்

            ஆண்டவர் மார்பில் சுகிப்போம்

            பதறாத வாழ்வும் சிதறாத மனமும்

            பரிசாக தேவனருள்வார் - ஆ ஆ

 

8.         பார் போற்றும் தேவன் நம் தேவன்

            பாரினில் வேறில்லை பாக்கியம்

            நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே

            வேறென்ன வாழ்வினில் வேண்டும்

            பிள்ளைகளும் சபையும் பிதா முன்னே நிலைக்கும்

            பரிசுத்த மாளிகை எழும்பும்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...