31 March 2026

ஆவியின் அருள்மழை பொழியட்டும்

நிஜீ.கீதங்கள்:1010

To Download Txt Lyrics file

 

          ஆவியின் அருள்மழை பொழியட்டும்

            அபிஷேகத்தால் உள்ளம் நிரம்பட்டும்

 

                        நிரப்பும் தேவா நிரப்பும் தேவா

                        இப்போதே என்னையும் நிரப்பும் தேவா

 

1.         ஜலத்தின் மேல் அசைவாடின ஆவியே

            நீச்சல் ஆழத்தில் என்னை அழைத்து செல்லுமே

 

2.         அன்னிய பாஷை தருகின்ற ஆவியே

            ஆண்டவரோடு பேசிட அழைத்துச் செல்லுமே

 

3.         எனக்காக வேண்டுதல் செய்யும் ஆவியே

            என் விண்ணப்பத்தை எடுத்து சொல்லி பதில் தாருமே

 

4.         பெந்தேகொஸ்தே நாளில் வந்த ஆவியே

            என் பாவங்களை சுட்டெரித்து தூய்மையாக்குமே

 

5.         உலர்ந்த எலும்பை ஒன்று சேர்க்கும் ஆவியே

            சேனையாய் நின்றிட வல்லமை தாருமே

 

6.         மண்ணான சாயல் கொண்ட சரீரம்

            மகிமையின் சாயலாய் மாற வேண்டுமே 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...