31 March 2026

ஆவியோடு ஆராதிக்க சுத்தம்

நிஜீ.கீதங்கள்:1168

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

நித்திய ஜீவன்: 1168

 

 

                   ஆவியோடு ஆராதிக்க

                        சுத்தம் தாரும் சுத்திகரியும்

                        சுத்திகரியும் சுத்திகரியும்

                        அனலாய் உம்மை ஆராதிக்க

 

1.         ஆதி அன்பில் நிலைத்திருக்க

            அக்கினி அபிஷேகம் தந்திடுமே - 2

            சுட்டெரியும் தூய ஆவியினால்

            தூய்மைப்படுத்தி துலங்கச் செய்யும் - 2 - ஆவியோடு

 

2.         ஏங்கும் உள்ளம் மகிழ்ந்திடவே

            கல்வாரி நதியால் சுத்திகரியும் - 2

            கழுவிடுமே எம்மை கழுவிடுமே

            பரிசுத்தமுள்ள பாத்திரமாய் - 2 - ஆவியோடு

 

3.         ஊழிய எல்லை விரிவடைய

            உத்தமரே நீர் உதவி செய்யும் - 2

            கரை திரை அற்ற மணவாட்டியாய்

            மகிமையாய் என்னை சேர்த்து கொள்ளும் - 2 - ஆவியோடு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...