31 March 2026

ஆழ்கடலிலே மீன்கள் பலவுண்டு

நிஜீ.கீதங்கள்:1040

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆழ்கடலிலே மீன்கள் பலவுண்டு

            அதையும் பிடித்திட மீனவர் பலவுண்டு

            அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு

            அதற்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு

 

                        யாரை அனுப்புவேன்

                        யார் என் வேலையாய் போவான்

 

1.         அலையைப் போலவே அலைந்து திரிந்திடும்

            அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட

            அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு

            அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு

            அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு

 

2.         சிலுவை அன்பினை சற்றும் அறியாமல்

            சிந்திய ரத்தத்தின் மகத்துவம் உணராமல்

            ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு

            ஜீவனைக் கொடுத்தவர் இயேசுவே தாணுண்டு

            ஆண்டவர் இயேசுவை அறிவிக்க யாருண்டு

            ஆண்டவர் தேடிடும் மனிதன் நீ உண்டு

 

 

- சுரேஷ் ஃபிரெடரிக்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...