42. இராகம்: உசேனி ஏகதாளம்
பல்லவி
யார் இவர்
ஆரோ? யார் இவர் ஆரோ?
யார் இவர்? பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ?
சரணங்கள்
1. ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே,
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ? - யார்
2. ஊரில் ஓர் இடமும் உகந்திட[1] இல்லையோ?
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ? - யார்
3. கர்த் தத்துவமோ காணாது தோள்மேல்;
சுற்றி வைக்கப் பழந்துணியோ? இவர்
தூங்கப் புல் அணையோ? - யார்
4. சேனை தூதர் இதோ! சிறப்புடன் பாட,
கானகக் கோனர்[2] காணவர,
இவர்
கர்த்தர் ஆவாரோ? - யார்
5. முந்து தீர்க்கர் பிதா மொழிந்த தெதிர் பார்த்த
சொந்தமான ஜனம் இஸ்ரவேலின்
சூரியன் இவரோ?
6. பாவியான என்மேல் பட்சமே மிகவாய்
ஜீவனைக் கொடுக்கப் பிறந்த என்றன்
ஜீவ நாயகரோ?
- வே.சா
No comments:
Post a Comment