31 March 2026

ஆனந்தம் ஆனந்தம் பேரின்பம் பேரின்பம்

நிஜீ.கீதங்கள்:1847

To Download Txt Lyrics file

 

          ஆனந்தம் ஆனந்தம் பேரின்பம் பேரின்பம்

          இரட்சிப்பின் ஆனந்தம் நித்தம் என் சங்கீதம்

           

                        கர்த்தாதி கர்த்தன் ராஜாதி ராஜன்

                        என்னை மீட்டதால்

 

1.         உளையான சேற்றில் உழன்றிருந்தேனே

            கனிவுடன் தூக்கினார் கன்மலையில் நிறுத்தினார்

            துதிக்கவே புதுபாடலால்

            நாவினை நிரப்பினார் நன்றி சொல்லுவேன்

 

2.         எரிகோவின் வீதியில் என்னை இயேசு கண்டார்

            காயங்கள் கழுவினார் பாவங்கள் போக்கினார்

            பாடுவேன் இனி நாளெல்லாம்

            ஓடுவேன் அவர் அன்பை எங்கும் கூறிட

 

3.         வான லோக ராஜா வரும் நாளில் நானும்

            பறந்தே செல்லுவேன் பாதியில் வானத்தில்

            பாடுகள் என் பாரங்கள் யாவுமே

            மாயமாய் மறைந்தே போகுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...