31 March 2026

ஆனந்தம் பொங்கி வழியுதே

நிஜீ.கீதங்கள்:2469

To Download Txt Lyrics file

 

          ஆனந்தம் பொங்கி வழியுதே

            அல்லேலூயா துதி பாடுகையில்

            வானம் திறந்து இறங்கிடுதே

            வல்ல ஆவி எந்தன் உள்ளத்திலே

 

                        போற்றுவோம் புகழ்வோம் தேவனே

                        சாற்றுவோம் சரணம் ராஜனை

 

1.         பரலோக ராஜாதி ராஜனை

            பாவ பரிகார தேவனை

            பரிசுத்த அன்பு ராஜனை

             பரவசமாகவே துதிப்போமே

 

2.         பாவமில்லா இரத்தம் சிந்தினாரே

            பாவ பரிகாரி ஆனாரே

            சாப ரோகம் நீக்கினாரே

            சந்தோஷம் சமாதானம் அருளினாரே

 

3.         எண்ணம் வார்த்தை ஆகு முன்னே

            சிந்தை செயலாய் மாறு முன்னே

            திண்ணமாய் எனக்கு செய்திடும்

            தெய்வத்தைப் போற்றி புகழ்வோமே

 

4.         ஏவல் செய் தூதர்கள் காத்திருக்க

            ஏன் அதற்காய் அஞ்ச வேண்டும்

            காவல் செய் கணங்கள் சூழ்ந்திருக்க

            களிப்போம் களிப்போம் களித்திடுவோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...