31 March 2026

ஆனந்தமாகவே சீயோனின் மீதிலே

சங்கீத சேவை:364

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             சரணங்கள்

 

1.         ஆனந்தமாகவே சீயோனின் மீதிலே

            ஆட்டுக்குட்டியுடன் நின்றிடுவோர்

            அன்பினில் தூயரே குற்றமில்லாதோரே

            அனுதினம் இணைந்தொன்றாய் ஜொலித்திடுவார்

 

                                    பல்லவி

 

                        சீயோனின் கானமே புதியதோர் கீதமே

                        ஜெயங் கொண்டோர் ஜீவியமும் இதுவாகுமே

 

2.         ஊரினின் றேகனாய் இனத்தி லிருவராய்

            தெரிந்தபி ஷேகத்தால் அழைக்கப்பட்டோர்

            பரிமிகு சீயோனின் ஒளியாய் விளங்கவே

            திருவடிதனைத் தொடர்ந்தேகியவர் - சீயோனின்

 

3.         அட்சயர் இயேசு போல் ஆசாரியர்களே

            இலட்சத்து நாற்பத்து நாலாயிரர்

            சாட்சியாய் பெற்றதாம் சர்வ கிருபையின்

            மாட்சியுறு சிகரமீ தாட்சி செய்வார் - சீயோனின்

 

4.         உத்தம ஸ்தானமும் நித்திய கீர்த்தியும்

            சுத்தராம் சீயோனின் புத்திரர்க்கே

            தத்தமாய் சேவையில் ஊற்றியே ஜீவனை

            சத்தியமதின் மதிலாய் நின்றவரே - சீயோனின்

 

5.         விந்தையாம் சீயோனின் நற்செய்தி கூறுவோர்

            சுந்தர பாதங்கள் நிற்குமதில்

            'பார்! உந்தன் தேவனே ராஜாதி ராஜனே

            பரிபாலனம் செய்கிறார்' எனக் கேட்குதே - சீயோனின்

 

6.         சீயோனில் ராஜனாய் ஏற்றபிஷேகமே

            சீர்மிகு மைந்தனே வீற்றிருப்பார்

            செங்கோலும் ஓங்குமே நீதியாய் எங்குமே

            நீங்கிடாததினின்று எந்நாளுமே - சீயோனின்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...