ஆராதனைக்கு
உரியவர்
ஆராதனைக்கு பாத்திரர் - 2
மாறாதவர் நல் நாயகர் - (2)
நான் ஆராதிப்பேன் என் இயேசுவை
1. செங்கடல் பிளந்து வழி கொடுத்தார்
சத்தமாய் துதித்திடுவேன் - 2
யோர்தானை உடைத்து கானான் தந்தார் -
(2)
யெகோவாவைத் துதித்திடுவேன் - (2) - ஆராதனைக்கு
2. மகிமை மறந்து மண்ணில் வந்தார்
மன்னனை துதித்திடுவேன் - 2
என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்துக்கொள்வார்
- (2)
பிரதான ஆசாரியரே (மகா) - (2) - ஆராதனைக்கு
3. கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார்
கர்த்தரை துதித்திடுவேன் - 2
பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார் - (2)
ராஜாவை துதித்திடுவேன் (இயேசு) - (2)
- ஆராதனைக்கு
4. கன்மலைப் பிளந்து தாகம் தீர்த்தார்
சத்தமாய் துதித்திடுவேன் - 2
மாறாவை மதுரமாய் மாற்றித் தந்தார் - (2)
யெகோவாவைத்
துதித்திடுவேன் - (2) - ஆராதனைக்கு
No comments:
Post a Comment