31 March 2026

ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்

நிஜீ.கீதங்கள்:239

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்

                        மகிமையின் பிரசன்னம்

                        நிறைவாய் இறங்கட்டும்

                        இந்த வேளையில்

 

1.         ஆவியிலே களிகூறவே

            என்றென்றும் விரும்புகிறேன்

            வாஞ்சிக்கிறேன் எந்நாளுமே

            உந்தன் சமூகத்தையே

            நேசமுகம் காண்கையிலே

            ஆவியில் நிரம்புகிறேன்

            பாடி உம்மை துதிக்கையிலே

            பரவசம் கொள்கிறேன்

 

2.         தாவீது போல் மகிழ்ந்திடவே

            சமூகம் வேண்டுகிறேன்

            ஆடிப்பாடி துதித்திடவே

            விடுதலை ஈந்திட்டீரே

            உன்னதத்தில் உம்முடனே

            உறவாட உதவிடுமே

            ஆவிக்குள்ளாய் அனுதினமும்

            அனல் மூள ஊற்றிடுமே

 

3.         மேல் வீட்டறை அனுபவத்தை

            என்றென்றும் தந்திடுமே

            ஆவி மழை கரை புரள

            தேசத்தை சந்தியுமே

            அஸ்திபாரம் அசைந்திடவே

            எழுப்பிடும் வாலிபரை

            எழுப்புதலால் உள்ளங்களை

            உயிர்ப்பிக்கச் செய்திடுமே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...