31 March 2026

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்-

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

                        எந்தன் ஆத்தும நேசரை புகழ்ந்திடுவேன்

                        அலைச்சல்கள் யாவையும் அகலச்செய்தார்- நல்

                        மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார்

 

1.         அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர்-தம்

            அழைப்பதில் விழிப்புடன் நிறுத்தவல்லோர்

            உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன்-அங்கு

            பிழைத்திடவே அன்பர் சமூகமதில்

 

2.         நம்பிக்கையற்றோனாய் அலைந்த வேளை-இயேசு

            நாதர் என் பக்கமாய் வந்தனரே

            பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார்-இந்த

            பாரினில் என்னை வெற்றிச் சிறக்கச் செய்தார்

 

3.         ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்

            என் பிதா ஆனதால் ஆனந்தமே

            ஏறெடுப்போம் நம் இதயமதை-என்றும்

            மாறாமல் பதில் தரும் மன்னனிடம்

 

4.         மேலோக நாடெந்தன் சொந்தமதே இந்த

            பூலோக நாட்டமும் குறைகின்றதே

            மாயையில் மனம் இனி வைத்திடாமல்-நேசர்

            காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்

 

5.         அற்புதமாம் அவர் நேசமது எந்தன்

            பொற்பரன் சேவை என் தாகமது

            பற்பல கிருபைகள் பகருகின்றார்-ஏழை

            கற்புடன் அவர் பணி செய்திடவே

 

6.         பரம தேசம் கண்ணில் தெரிகிறதே எந்தன்

            நாதரின் தொனி காதில் கேட்கின்றதே

            காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்

            விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்

 

7.         கானானின் கரையிதோ காண்கிறதே எந்தன்

            காதலன் தொனி காதில் கேட்கின்றதே

            காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்

            விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...