27 March 2026

ஆரிடம் போவேன் நான்

கீ.கை:299

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

299.

 

                             பல்லவி

 

          ஆரிடம் போவேன் நான் அவதிகள் மிகுந்திடில்

          ஆதரிப்பாய் என்னை ஐயனே

 

                             அனுபல்லவி

 

                        பாரினில் உனையல்லால் பாவிக்கோர் துணையுண்டோ

                        யாருமில் லையேகண் பாருமெனை யென்நாதா - ஆரிடம்

 

                             சரணங்கள்

 

1.         சித்தம் இரங்காதோ திருவுள்ளம் கனியாதோ

            தினம் தினம் படும் பாடும் தீராதோ

            அத்தனே என்பிழை அத்தனை யும்பொறுத்

            தாண்டு இரட்சித் தருளுவாய் அன்பேஎன் ஆருயிரே - ஆரிடம்

 

2.         சோதனை யனுதினம் நூதனமாய் வருதெ

            சொல்லி முடியாத் துயர் தருதே

            நாதனே போகும் வழி ஏதும் காணேனே ஐயோ

            வேதனே வெற்றி வழி விளங்கிடச் செய்திடாயோ - ஆரிடம்

 

3.         நிர்பந்த மனிதன்நான் நின் கிருபை யில்லையேல்

            நெறிதவறி விழுந்து கெடுவேன்.

            அப்பனே என் நிலை,கண் டெப்படியு மிரங்கி

            ஒப்பிலாத் துணைசெய்யாய் உன்னைவிட் டெங்கு போவேன் - ஆரிடம்

 

4.         உண்மை குறையும், உலோகம் உரைத்திடும் தீர்ப்புகள்

            உத்தம மாயிரா தென்றறிவேன்

            எண்ண மெல்லாம் நிறுக்கும் அண்ணலுன் நிர்ணயத்தில்

            என்ன குறைவுமின்றி ஏழையேன் காணச் செய்வாய் - ஆரிடம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...