27 March 2026

ஆராதிக்க கூடி வந்தோம் உம்மை

நிஜீ.கீதங்கள்:2250

To Download Txt Lyrics file

 

                   ஆராதிக்க கூடி வந்தோம்

                        உம்மை ஆர்ப்பரித்து பாட வந்தோம்

                        ஆத்துமமே என் முழு உள்ளமே

                        அதிசயம் நடந்திடுமே நம் வாழ்வில்

                        அற்புதம் நிகழ்ந்திடுமே

 

1.         சுகம் பெலன் ஜீவன் எனக்கு தந்தீர்

            புது புது கிருபையால் முடி சூட்டினீர்

            தாங்கிட முடியா பெலவீனத்தில்

            உம் உன்னத பெலன் தந்து உயிர்ப்பித்தீர்

            கோர சிலுவையில் உயிர் விட்டீர்

            மீண்டும் உயிர்த்தீர் ஆச்சர்யமே

            என்னை காத்திடும் தெய்வமே கருணை வடிவே

            பொழுதும் எனக்கு நீரே எந்நாளும்

 

2.         வனாந்திர பாதையில் வழி காட்டினீர்

            வாதை நோயும் வந்த போது கரம் நீட்டினீர்

            ஆயிரம் ஆயிரம் ஆலோசனை

            அனுதினம் எனக்கு நீர் அளித்தவரே

            என்னை மீட்டிட்ட வல்ல கர்த்தரே

            என்னை அழைத்திட வந்திடுவாரே

            எந்தன் ஜீவன் உள்ள காலம் வரை

            சாட்சி சொல்லி உயர்த்துவேன்

            உலகமெங்கும் உம்மையே எந்நாளும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...