ஆராதனை உமக்கே
நான்
ஆராதிப்பேன் உம்மையே
1. எபிநேசர்
என்று உம்மை நான் அழைப்பேனே
இம்மட்டும்
உதவி செய்தீர் நன்றி சொல்கிறேன் - 2
ஆபத்திலும்
நெருக்கத்திலும் கை தூக்கினீர் - (2)
என்
குரல் கேட்டு ஓடி வந்து உதவி செய்கிறீர் - (2)
நன்றி
ஐயா நன்றி ஐயா
எல்ஷடாய்
எல்ஷடாய் - 2
2. இம்மானுவேல்
என்று உம்மை அழைப்பேனே
என்னோடு
இருக்கின்றீர் நன்றி சொல்கின்றேன் - 2
அக்கினியாய்
மேகமாய் என்னோடு நடக்கின்றீர் - (2)
உந்தன்
உள்ளங்கையில் வரைந்து என்னை பாதுகாக்கின்றீர் - (2) - நன்றி
3. எல்ரோயீ
என்று உம்மை நான் அழைப்பேனே
என்னை
நோக்கிப் பார்த்தீரே நன்றி சொல்கின்றேன் - 2
தனிமையிலும்
சிறுமையிலும் கண்ணோக்கினீர் - (2)
என்
அந்தரங்க துணையானீர் நன்றி சொல்கிறேன் - (2) - நன்றி
No comments:
Post a Comment