27 March 2026

ஆராதனை இயேசு ராஜா

நிஜீ.கீதங்கள்:1988

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனை இயேசு ராஜா

          ஆராதனை ஏற்றுக்கொள்ளுமே

            ஆவியான தெய்வமே

            எங்கள் ஆராதனை உங்களுக்குத்தான் - 2

 

                        எங்கள் கன்மலையே எங்கள் கோட்டையே

                        எங்கள் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம் - 2 - ஆராதனை

 

1.         கர்த்தர் மேல் எந்தன் பாரத்தை வைத்தேன்

            அவரே என்னை ஆதரிப்பார் - 2

            எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்

            எல்ஷடாய் எந்தன் அடைக்கலமே - 2 - எங்கள்

 

2.         கிருபையால் என்னை இரட்சித்தாரே

            பாவத்தின் கறைகள் நீக்கினாரே - 2

            நெருக்கங்கள் யாவும் மாற்றினாரே

            விசாலத்தில் என்னை வைத்திட்டாரே - 2 - எங்கள்

 

3.         தாயினும் மேலாய் நேசித்தாரே

            தந்தையைப் போல் போஷித்தாரே - 2

            கால் சறுக்கிடும் வேளைகளில்

            கரத்தை பிடித்து தூக்கினாரே - 2 - எங்கள்

 

 

- Isaac Livingstone

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...