27 March 2026

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடுவோம் இயேசு

நிஜீ.கீதங்கள்:2272

To Download Txt Lyrics file

 

                    ஆராதிக்க கூடினோம்

                        ஆர்ப்பரித்து பாடுவோம்

                        இயேசு நம்மில் ஜீவிக்கிறார்

                        ஆர்ப்பரித்து துதிப்போம்

                        சுவிசேஷம் கூறுவோம் உடன் பங்காளிகளாய்

 

1.         தடைகளை தகர்க்கும் ராஜாதி ராஜன்

            நம் முன்னே செல்கின்றாரே

            எரிகோவும் யோர்தானும்

            முன் நிற்க முடியாதே

            செங்கடலும் பிளந்து பாதை விடுமே

            சத்துருவின் சேனை அழிந்திடுமே

            அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

 

2.         ஏழு மடங்காக்கிய கொடிய தீயும்

            சேதப்படுத்திடாதே

            தண்ணீரைக் கடக்கையில்

            உன்னோடு வருவாரே

            அக்கினியில் நம்மோடு நடக்கின்றாரே

            சத்துருவின் அக்கினி அழிந்திடுமே

 

3.         கெர்ச்சித்து எதிர்க்கின்ற சாத்தானை வெல்ல

            இயேசு பெலன் ஈவாரே

            சிங்கம் போல் விழுங்கவே எதிரி வந்தாலுமே

            இயேசுவின் நாமத்தில் கட்டுவோமே

            சத்துருவின் ஆட்டம் அடங்கிடுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...