31 March 2026

ஆனந்தம் அனந்த ஆனந்தம்

நிஜீ.கீதங்கள்:930

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆனந்தம் அனந்த ஆனந்தம்

                        ஆத்துமாவின் நேசரில் என்றும் ஆனந்தம்

 

1.         இப்புவியில் ஆனந்தம்

            எப்போதும் ஆனந்தம்

            பாவங்களை மன்னித்தார்

            சாபங்களை நீக்கினார்

            என்னுடன் வருகிறார் என்றுமே வருகிறார்

            வழியெல்லாம் ஆனந்தம்

            வாழ்க்கையெல்லாம் ஆனந்தம்

 

2.         ஆவியிலே ஆனந்தம்

            பாஷையாலே ஆனந்தம்

            உள்ளத்தை நிறைத்திட்டார்

            தேவ பெலன் தந்திட்டார்

            ஆவி வரம் தருகிறார் அனல் மூட்டி விடுகிறார்

            ஆராதனை ஆனந்தம்

            துதி ஸ்தோத்திரம் ஆனந்தம்

 

3.         நேசரன்பு ஆனந்தம் நித்ய நித்ய ஆனந்தம்

            ஜீவ தண்ணீர் தந்திட்டார்

            தாகமதை தீர்த்திட்டார்

            ஜீவநதி ஓரமாய் ஜீவகிரீடம் தரித்தே

            ஆடுவேன் பாடுவேன்

            என்றென்றுமாய் ஆனந்தம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...