பல்லவி
ஆர்ப்பரிப்போம் தினம் அக மகிழ்வோம்
இராஜாதி
இராஜன் நம்மை ஆட்சி செய்வார்
சரணங்கள்
1. அல்லேலூயா
கீதம் தொனித்திடுமே
எக்காள
சத்தம் முழங்கிடுமே
மணவாளன்
இயேசு வந்திடுவார்
மணவாட்டியாய்
அவர் பின் செல்லுவோம் - ஆர்ப்பரிப்போம்
2. நடு
வானில் இயேசு ஆட்சி செய்வார்
நீதியின்
செங்கோலை அவர் பிடிப்பார்
வெண்ணங்கி
உடையை தரித்தோராய்
தூய
கீதங்கள் நாம் பாடிடுவோம் - ஆர்ப்பரிப்போம்
3. பஞ்சமில்லை
அங்கு பசியுமில்லை
துன்பமில்லை
அங்கு துயரமில்லை
நீடித்த
ஆயுளை நமக்களிப்பார்
நீதிமான்களாய்
நாம் நிலைத்திருப்போம் - ஆர்ப்பரிப்போம்
No comments:
Post a Comment