ஆராய்ந்து பாரும் என் இயேசுவே
என்னை ஆராய்ந்து பாருமேன்
சோதித்து அறியும் என் இயேசுவே
என்னை சோதித்து பாருமேன் -
(3)
ஆராய்ந்து பாரும் சீர்
தூக்கி பாரும்
நித்திய வழியில் நடத்தும் - என்னை
- 2
1. என் வழிகளும் நினைவுகளும்
என்றும் உமக்கு முன் இருக்கின்றதே - 2
என் இருதய சிந்தைகளை
முற்றும் முழுவதும் அறிந்தவரே -
2 - ஆராய்ந்து
2. என் கண்களும் காட்சிகளும்
என்றும் உமக்கு முன் இருக்கின்றதே
- 2
என் ஆசைகள் இச்சைகளை
முற்றும் முழுதும் அறிந்தவரே - 2
- ஆராய்ந்து
3. என் கரங்களும்; கிரியைகளும்
என்றும் உமக்கு முன் இருக்கின்றதே
- 2
என் கால்களின் பாதைகளை
முற்றும் முழுதும் அறிந்தவரே - 2
- ஆராய்ந்து
4. என் நாவும் வார்த்தைகளும்
என்றும் உமக்கு முன் இருக்கின்றதே
- 2
என் செவி கேட்கும் ஓசைகளை
முற்றும் முழுதும் அறிந்தவரே - 2
- ஆராய்ந்து
No comments:
Post a Comment