09 May 2026

அல்லேலூயா அல்லே

பாடல்

Text file Download

 

 

 

            அல்லேலூயா அல்லே

            அல்லேலூயா அல்லே

            அல்லேலூயா அல்லே

            அல்லேலூயா

 

                        துதிப்போம் நாம் துதிப்போமே

                        தேவாதி தேவனைத் துதிப்போமே

                        மகிழ்வோம் நாம் மகிழ்வோமே

                        மன்னவர் இயேசுவில் மகிழ்வோமே

                        துதிப்போம் நாம்

 

1.         கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனமே

            இயேசுவை நம்பினால் பாக்கியமே

            பரம பிதாவின் பிள்ளை நாமே

            பரிசுத்தர் இயேசுவில் மகிழ்வோமே

            துதிப்போம் நாம்

 

2.         தாவீது தேவனைத் துதித்தாரே

            மரியாளும் தேவனையே துதித்தாரே

            துதிப்பதற்கே நம்மை அழைத்தாரே

            துன்பத்திலும் இன்பத்திலும் துதிப்போமே

            துதிப்போம் நாம்

 

3.         தூதர்களும் தேவனை துதிக்கிறார்கள்

            சீடர்களும் தேவனையே துதித்தார்கள்

            அபிஷேகம் பெற்றவர் துதிப்பார்கள்

            ஆண்டவர் இயேசுவைத் துதிப்போமே

07 May 2026

அல்லேலூயா அல்லேலூயா விடுதலை விடுதலை

பாடல்

Text file Download

 

 

          அல்லேலூயா அல்லேலூயா

          விடுதலை விடுதலை

            ஆண்டவரே ஆவியானவர்

            அவர் எங்குண்டோ அங்கு விடுதலை

 

                        பாவத்திலிருந்து விடுதலை

                        சாபத்திலிருந்து விடுதலை

                        அழிவிலிருந்து விடுதலை

 

                        அடிமைத்தனத்தில் விடுதலை

                        பாவி என் மீது அன்பு வைத்தாரே

 

            சேற்றில் இருந்து என்னை தெரிந்து கொண்டாரே

            தம் இரத்தத்தாலே கழுவி விட்டாரே

            ஆவியாலே அபிஷேகம் செய்தாரே

 

            ஆனந்தம் ஆனந்தமே

            கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கை

            ஆனந்தம் ஆனந்தமே

 

            என் இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை

            இனி கவலை ஒன்றும் என் வாழ்வில் இல்லை

 

            அவர் அனுதினமும் வழி நடத்தும் தேவன்

            கண்ணின் மணிபோல் என்றும் என்னை அவர் காப்பார்

29 April 2026

அப்பா அப்பா இயேசப்பா உம்மை

பாடல்

Text file Download

 

 

 

                   அப்பா அப்பா இயேசப்பா

                        உம்மை நம்பி வந்தேன் நானப்பா

                        என்னை என்றும் கைவிடமாட்டீர் - நீர்

                        என்னை விட்டு விலகிடமாட்டார்

 

1.         உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன்

            உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன்

            உம்மை நம்பி வந்து விட்டதால் - நான்

            உயிரோடு பிழைத்திருக்கிறேன்.

 

2.         அன்னையும் தந்தையும் மறந்து போகலாம்

            ஆத்மநேசர் என்னையும் மறப்பதில்லையே

            உறவுகளும் பகையாகலாம் - நீர்

            ஒருவர் மடடும் எனக்குப் போதுமே

 

3.         பாவமும் சாபமும் நிக்கிவிட்டீரே

            பரிசுத்தமாய் என்னையும் மாற்றி விட்டீரே

            பாசமுள்ள நேசர் இருக்கிறீர்

            உமதன்பினாலே கவர்ந்திழுக்கிறீர்

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...